Posts

இதோ நம் தாய்

Image
கௌதமியைவிட ஆனந்திக்கு அவள் அம்மாவையே பிடித்திருக்கிறது . கௌதமி ஆனந்தியினுடைய தாய்தான் என்றபோதிலும் கௌதமியை பிடிக்காத ஆனந்தி வாழ்நாளெல்லாம் தாய்மையை தேடியே அலைந்து திரிகிறாள் . தாய்மை என்பது உடலா ? உணர்வா ? அதை தன்னால் உணர முடியுமா ? பிறருக்கு அந்த   உணர்வை   தர முடியுமா ?  வாழ்க்கை முழுவதும் ஆனந்தியை இந்த கேள்விகள் விடாமல் துரத்துகின்றன . கேள்விகளுக்கான விடைகளை கண்டடைய தலைகீழாகிப்போன தன் வாழ்வில் தன்னந்தனியே தேடி அழைகிறாள் . தன் இருப்பு , தனிமை , தேடல் , ஆழ்மன போராட்டங்கள் , எதிலும் ஓர் நிலையற்றத் தன்மை என ஆனந்தியை வாழ்க்கை அலைக்கழிக்கிறது . ஆனாந்தியின் வாழ்வின் வழியே நம் சமூக யதார்த்தங்கள் சத்தமின்றி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது .  “ இயற்கையில் எல்லாமே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது . நாம் இயற்கை என்றால் , நமது எண்ணங்கள் , உணர்வுகள் , முடிவுகள் எல்லாமும் இயற்கைதான் . பிறவற்றைச் சுரண்டாத எல்லா உணர்வுகளும் இயல்பானவையே , ஏற்கப்படவேண்டியவையே .” ஏற்கிறோமா நாம் ? உலகோடு ஒத்து வாழச் சொல்லி ...

ஆண் மனதின் தத்தளிப்பு

Image
  அடிப்படையாக ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அன்போ காதலோ மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்கப்பெறாத சூழலில் ஒரு ஆண், அகவெளியில்,  அதுவும் தன் நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் ஒரு இருபத்தியெட்டு வயது பெண்ணால் அங்கீகரிக்கப்பட்டு , காதலிக்கப்பட்டு   கொண்டாடப்பட்டு பின்னாளில் தன் மனைவியிடம் அகப்பட்டுக் கொண்டு அல்லாடுவதே இந் நாவல் . முன்னிரவில் தன் மனைவியுடனான உரையாடலிலிருந்து தொடங்குகிற கதை ஒரு கணவனின் புலம்பலாகத் தொடங்கி , ஒரு பெண்ணின் தவிப்பாக விரிந்து , அவன் மனைவியின் வெறுப்பாகவும் இருவரின் வன்மமாகவும் தொடர்கிறது . அன்பின் பொருட்டு காதலின் பெயரால் விரிவடைகிற கதையில்   யாரும் யாரையும் காதலிக்கவில்லை . அன்புக்காக ஏங்கி அன்பை கொண்டாடுகிற மனிதர்கள், காதலை விதந்தோதுகிற மனிதர்கள்,  காதலுக்கோ அன்புக்கோ ஏன் தனக்கே கூட உண்மையாக இல்லை என்கிற உண்மையை   அப்பட்டமாக சொல்கிறது நெஞ்சறுப்பு . முழுக்கவும் ஆண் கதாபாத்திரத்தின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருப்பதால் நாவல் முழுவதும்  ஆண் தரப...