இதோ நம் தாய்
கௌதமியைவிட ஆனந்திக்கு அவள் அம்மாவையே பிடித்திருக்கிறது .
கௌதமி ஆனந்தியினுடைய தாய்தான் என்றபோதிலும் கௌதமியை பிடிக்காத ஆனந்தி வாழ்நாளெல்லாம் தாய்மையை தேடியே அலைந்து திரிகிறாள்.
தாய்மை என்பது உடலா? உணர்வா? அதை தன்னால் உணர முடியுமா? பிறருக்கு அந்த உணர்வை தர முடியுமா?
வாழ்க்கை முழுவதும் ஆனந்தியை இந்த கேள்விகள் விடாமல் துரத்துகின்றன. கேள்விகளுக்கான விடைகளை கண்டடைய தலைகீழாகிப்போன தன் வாழ்வில் தன்னந்தனியே தேடி அழைகிறாள்.
தன் இருப்பு, தனிமை, தேடல், ஆழ்மன போராட்டங்கள், எதிலும் ஓர் நிலையற்றத் தன்மை என ஆனந்தியை வாழ்க்கை அலைக்கழிக்கிறது. ஆனாந்தியின் வாழ்வின் வழியே நம் சமூக யதார்த்தங்கள் சத்தமின்றி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
“இயற்கையில் எல்லாமே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. நாம் இயற்கை என்றால், நமது எண்ணங்கள், உணர்வுகள், முடிவுகள் எல்லாமும் இயற்கைதான். பிறவற்றைச் சுரண்டாத எல்லா உணர்வுகளும் இயல்பானவையே, ஏற்கப்படவேண்டியவையே.”
ஏற்கிறோமா நாம்?
உலகோடு ஒத்து வாழச் சொல்லி ஆனந்தியை கௌதமி எப்போதும் நிர்பந்தித்தபடியேயிருக்கிறாள்.
கௌதமி மட்டும்தானா நாமில்லையா?
உலகோடு ஒத்து வாழ வேண்டும்.
சரி.
எது உலகம்?
ஆனந்தியின் கேள்விக்கு கௌதமியிடம் என்றுமே பதிலிருந்ததில்லை.
நம்மிடம் இருக்கிறதா?
***
இதோ நம் தாய்
வயலட்
சால்ட் பதிப்பக வெளியீடு
Comments
Post a Comment